top of page

புதிதாக்கப்பட்ட பெண் 2




"பெரும்பாடுள்ள ஸ்திரீ" என்று வேதம் குறிப்பிடும் ஸ்திரீயினுடைய வேதனையை நம்மில் அநேகரால் புரிந்து கொள்ள முடியும். இந்த ஸ்திரியிடம் இருந்து ஒரு விஷேஷித்த குணத்தை நாம் கற்றுக் கொள்ளலாம்.


"தன் வாழ்க்கை போராட்டம் மாறியே ஆக வேண்டும் என்ற எண்ணமும் அதற்கான விடாமுயற்சியுமே அது".


மத்தேயு ஒன்பதாம் அதிகாரம் வசனம் 21 இவ்வாறாக சொல்லுகிறது:நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சுத்தமாவேன் என்று தன் உள்ளத்திலே எண்ணிக் கொண்டு அவர் பின்னாலே வந்து அவர் வஸ்திரத்தை தொட்டாள் .


அன்பான தோழியே, வாழ்வின் நெருக்கத்திற்கும், துன்பத்திற்கும், மாறவே வாய்ப்பில்லை என்கிற உறவுகளுக்கும் நாம் பழகிவிட்டோமா? அப்படி இருப்பதினால் நமக்கு எந்த தீர்வும் வரப்போவதில்லை. இன்றே கிறிஸ்துவை தொட்டு உங்கள் சுகத்தை, சுகவாழ்வைப் பெற தீர்மானியுங்கள்.


நீர் என்னை ஆசீர்வதித்தால் ஒழிய உம்மை நான் போக விடேன் என்று கூறி அவரை தொடுங்கள்.


அவர் இரங்குவார். நம்மை பார்த்தும் "மகளே திடன் கொள் உன் விசுவாசம் உன்னை ரட்சித்தது" என்பார். அது எத்தனை வருடமாக இருந்தாலும் அதை நீக்கி நமக்கு புது வாழ்வு தருவார். ஜெபத்தை விடாதீர்கள் அவரைப் பிடித்துக் கொண்டு உங்களுக்கான விடுதலை வாழ்வை பெற்று அனுபவியுங்கள்.


அன்புள்ள இயேசுவே, எந்தவித பெரிய பாடுகளையும் நீர் நீக்க வல்லவர் என்று நம்பி உம்முடைய வஸ்திரத்தை நாங்கள் தொடுகிறோம். உம்மையே நம்பி இருக்கிறோம். எல்லா பாடுகளையும் நீர் மாற்றத்தொடங்கிவிட்டதற்காக நன்றி. இயேசுவின் நாமத்தில் ஆமென்.

Comments


bottom of page