
யாத்திராகமம் 3:6-ல் தேவனை நோக்கி பார்த்த பார்க்க பயந்ததினால் மோசே முகத்தை மூடிக்கொண்டான்.
மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான். ( verse 6)
யாத்திராகமம் 34:33 இல் மோசே ஜனங்களுடனே பேசி முடிக்கும் மட்டும் தன் முகத்தின் மீது முக்காடு போட்டிருந்தான்.
இரண்டு முக்காடுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை கவனித்தீர்களா? முதலில் மோசே தேவனை பார்க்க பயந்தான். இரண்டாவது ஜனங்கள் அவனை பார்க்க பயந்தார்கள். காரணம் "தேவப்பிரசன்னம்".
இரண்டும் முக்காடு தான். மூடுவது தான் ஆனால் ஒரு பயந்த இரட்சிப்பை அறியாத தேவனை சந்திக்க பயப்பட்ட மோசே தெய்வ பிரசன்னத்தை சுமந்து வந்த போது ஜனங்கள் அவனை பார்த்து பயப்பட்டார்கள். தேவப்பிரசன்னம் நம்மை அந்த அளவு வலிமை உள்ளவர்கள் ஆக்குகிறது. பிசாசு நம்மை பார்த்து நடுங்க வேண்டுமானால் நாம் தேவப்பிரசன்னத்தை சுமப்பவர்களாக இருக்க வேண்டும். நாம் பிரசன்னத்தை சுமப்பவர்களாக இருந்தால் மக்கள் நம்மால் ஆறுதல் அடைவார்கள். தேவனிடம் காத்திருப்போம் பிரசன்னத்தால் நிறைவோம் மக்களை ஆறுதல் படுத்துவோம் பிசாசை ஓட வைப்போம்.
அன்புள்ள இயேசுவே,
மோசேயைப் போல உம்முடைய சமூகத்தில் அமர்ந்திருக்க,உம்முடைய பிரசன்னத்தினால் நிறைய,எங்கள் முகங்கள் பிரகாசிக்க, பிறருக்கு ஆசீர்வாதமாக நாங்கள் இருக்க,பெலத்தால் நிறைந்தவர்களாக வாழ எங்களுக்கு கிருபை தாரும்.
இயேசுவின் நாமத்தில் பிதாவே,ஆமென்.
Co- writing: Anitha with Kiruba Sobitharaj.
留言