விசுவாச வாழ்க்கை எளிதானதல்ல!
காணாத தேவனை விசுவாசித்து அவர் வார்த்தையை வாக்குத்தங்களை நம்புதல் நெடுநாள் காத்திருத்தலின் மத்தியிலும் விசுவாசத்தோடு நம்புதல் என சவால்கள் பல உண்டு.
ஆனால்,இந்த விசுவாசமே நமக்கு கேடகம்.
நாம் சோர்வுரும்போது செய்ய வேண்டியது என்ன என்பதை ஏசாயா 51 2-ல் பார்க்கலாம்.
உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும் உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப் பாருங்கள். அவன் ஒருவனாய் இருக்கையில் நான் அவனை அழைத்து அவனை ஆசீர்வதித்து அவனை பெருகப் பண்ணினேன்.
நடைமுறையின் படி சொன்னால் உங்களை விசுவாசத்தில் நடத்தியவர்களை வளர்த்தவர்களை வெற்றியாய் ஓட்டத்தை முடித்தவர்களை பாருங்கள். சோர்வு மேற்கொள்ளாது இருக்க விசுவாச வீரர்களான ஆபிரகாம் சாராள் போன்ற பலரை பற்றி வேதத்தில் வாசியுங்கள். வசனம் 4-ல் தேவன் சொல்கிறார் "என் வாக்கை கவனியுங்கள் வேதம் என்னிலிருந்து வெளிப்படும்" என்று. உயர்வுக்கோ ஏதோ ஒரு புதிய ஆரம்பத்திற்கோ காத்திருக்கும் நீங்கள் அவர் வார்த்தையை வேதத்தை தேடி வாசியுங்கள்.
ஆபிரகாம் ஒருவனாய் இருக்கையில் தேவன் அழைத்தார் அழைத்து பெருகப்பண்ணினார். ஒன்றுமில்லாமையில் இருந்து அவர் நம் வாழ்க்கையில் பெருக்கத்தை கொண்டு வரட்டும்.
அன்புள்ள இயேசுவே,
இந்த நாளிலும் எங்களை எங்கள் விசுவாசத்தை நீர் பெருகப்பண்ணி ஆப்ரகாமின் ஆசிர்வாதங்களை எங்களுக்கு தருவதற்காக நன்றி.விசுவாசத்தோடு அதைப் பெற்றுக் கொள்கிறோம்.
இயேசுவின் நாமத்தில் பிதாவே.
ஆமென்.
Comments