பழைய ஏற்பாட்டின் படி பலிபீடத்தின் மேல் ஒவ்வொருவரும் காணிக்கையை செலுத்தினார்கள். ஒரு கட்டத்தில் அதன் நோக்கத்தை இழந்து பலியை செலுத்திக் கொண்டிருந்தார்கள். நமக்கோ பலியாக இயேசு செலுத்தப்பட்டிருக்கிறார். அதன் நோக்கத்தை நாம் உறுதியாக பிடித்துக் கொள்ளுவோம். மத்தேயு 23 வசனம் 17 இவ்வாறு சொல்கிறது.
எது முக்கியம் பொன்னோ பொன்னை பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?
நாமே தேவாலயம். மேலும் வசனத்தின்படி தேவாலயத்தை அலங்கரிக்கும் பொன்னுக்கு அல்ல தேவாலயத்திற்கே மதிப்பு அதிகம். தேவன் தாமே நம்மை தேவாலயமாக "அவர் தங்கும் இடம்" என்னும் நோக்கமுடைய இடமாக அதைக் காத்துக் கொள்ள நமக்கு உதவி செய்வாராக!
ஆலயத்தின் அலங்காரம் பரிசுத்தம், தரிசனம் உடையது ஆலயம். அடிமைத்தனத்தின் இடமல்ல விடுதலையின் இடமே ஆலயம். உங்கள் பலிபீடத்தை, ஆலயத்தை சீர்தூக்கி பாருங்கள். மத்தேயு 23 :2,3 போல் வேதபாரகராகவோ பரிசேராகவோ பேசுகிறவர்களாக மட்டுமல்ல, வசனத்தின் படி செயல்பட ஆவியானவர் நம்மை உயிர்ப்பிப்பாராக. அவர் மகிமைப்படும் ஆலயமாக நம்மை நிறுத்துவராக. அவருடைய தரிசனம், பரிசுத்தம், விடுதலை நம்மில் இருப்பதாக!
அன்புள்ள இயேசுவே,
நாங்கள் இரட்சிக்கப்பட்டதன், தெரிந்தெடுக்கப்பட்டதன், அபிஷேகிக்கப்பட்டதன் நோக்கத்தை அறிந்து பேச்சில் மாத்திரம் அல்ல எங்கள் செயலில் உன் வார்த்தையின் நிறைவு இருக்க சுத்தமுள்ள மனசாட்சியை விருத்தசேதனம் பண்ணப்பட்ட இருதயத்தை எங்களுக்கு தாரும்.
இயேசுவின் நாமத்தில் பிதாவே.
ஆமென்.
תגובות